பெரியாரை அவமதித்தாரா சந்தானம்? - பட இயக்குநர் கொடுத்த விளக்கம்!

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட படம் தொடர்பான வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதனை அடுத்து, அந்தப் படத்தின் இயக்குநர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். உடல் கேலி செய்கிறார் என இவர்மீது விமர்சனங்கள் இருந்தது. ஆனால், இனிமேல் அப்படியான நகைச்சுவை செய்ய மாட்டேன் என அவர் கூறியிருந்தார். சமீபத்தில் வெளியான அவரது ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘80ஸ் பில்டப்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் நடித்திருக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 2 அன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ராமசாமி என்ற பெயரோடு சாமிக்கு கற்பூரம் காட்டிக் கொண்டிருப்பார். அப்போது பின்னால் ஒரு குரல், ‘சாமி இல்லன்னு சொன்ன ராமசாமி தானே?’ எனக் கேட்க, ‘நான் அந்த ராமசாமி இல்ல’ எனச் சொல்வார்.

இந்த வீடியோதான் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு இயக்குநர் கார்த்திக் யோகி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “மக்கள் புண்படும்படியான எந்தக் காட்சியும் நாங்கள் படத்தில் வைக்கவில்லை. படம் பார்க்கும்போது அது உங்களுக்கே புரியும். பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படம்தான் ’வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்தின் ட்விட்டர் பதிவு தவறாக புரிந்துகொள்லப்பட்டது. தந்தை பெரியாரை அவமதிக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. சந்தானம் இந்த சர்ச்சைக்கு விரைவில் விளக்கம் அளிப்பார்"எனக் கூறியுள்ளார். சந்தானம் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in