’ஜெயிலர்’ ரஜினி போல தன்னை மிரட்டிய நபர்... உண்மையை உடைத்த சந்தானம்!

நடிகர் சந்தானம்...
நடிகர் சந்தானம்...

கல்லூரி படித்த காலத்தில் தன்னை ‘ஜெயிலர்’ ரஜினி போல மிரட்டிய நபர் குறித்து நடிகர் சந்தானம் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளார்.

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் கல்லூரியில் பொதுமக்கள் பயனடையும் விதமாக உணவு அரங்குகள் துவங்கப்பட்டுள்ளது. உணவருந்திகொண்டே இங்கு பயிலும் மாணவர்கள் சினிமா சம்மந்தமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான ஏற்பாடுகளை கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நடிகர் சந்தானம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சந்தானம், “நான் படிக்கும்போது ஒரு கேண்டீன் தான் இருக்கும். அந்த கேண்டினில் அழுக்கு உடையுடன் போட்டுக்கொண்டு ஒருவர் இருப்பார். அவர்தான் சமைப்பார், அவர்தான் ஓனர், அவர்தான் சப்ளையர். காலேஜில் அவர் போடுவது தான் சாப்பாடு, நாம் எதுவும் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் ‘ஜெயிலர்’ ரஜினி போல, ‘நான் வைக்கிறதுதான் சாம்பார் சாதம்! அமைதியா போயிரனும்’ என மிரட்டுவார்” என்றார்.

'ஜெயிலர்'  ரஜினிகாந்த்
'ஜெயிலர்' ரஜினிகாந்த்

மேலும், ’எனக்குப் பிடித்தமான உணவு சாம்பார், உருளைக்கிழங்கு ஃபிரை. அதுதான் பிடிக்கும். உணவு என வந்தாலே 90% யூடியூபில் போட்டு லைக் வாங்குவதற்கு தான் சாப்பிடுகிறார்கள். படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும். சினிமா அதுதான் எதிர்பார்க்கிறது. என்னுடைய நடிப்பில் ’80’ஸ் பில்டப்’, ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய அடுத்தடுத்த படங்கள் வர உள்ளது” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in