சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்!

நடிகர் சஞ்சீவ்
நடிகர் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ் மீண்டும் சன் டிவிக்குத் திரும்பியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் முன்பு ’கிழக்கு வாசல்’ சீரியல் நடிகை ராதிகாவின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பூஜையில் நடிகர் சஞ்சீவ் இருந்தார். இவர்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. இதுதொடர்பாக அவர், `என்ன காரணம் என்பதை மீடியா முன்னாடி விளக்கமாக பேச விரும்பல. நடந்ததை மறந்துட்டு அடுத்ததா என்னன்னு பார்க்கணும். சீக்கிரமே அடுத்த புராஜெக்ட் இருக்கும்’ எனவும் கூறியிருந்தார்.

நடிகர் சஞ்சீவ்
நடிகர் சஞ்சீவ்

சொன்னதைப் போலவே, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `வானத்தைப் போல' தொடரில் வீரசிங்கம் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவிலேயே புதுத் தொடரிலும் இவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது என சீரியல் வட்டாரங்கள் சொல்கின்றன. ’வானத்தைப் போல’ தொடரில் என்ட்ரி கொடுத்ததற்காக சஞ்சீவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன் பேக் டு சன் டிவி!' எனக் குறிப்பிட்டு அவர் என்ட்ரியாகும் புரோமோ வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். முன்பு இதே சன் டிவியில் இவரது ‘திருமதி செல்வம்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in