நாக சைதன்யாவிற்காக சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

நாக சைதன்யாவிற்காக சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

நாக சைதன்யா படத்திற்காக, சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம், 'யசோதா'. ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரி-ஹரீஷ் இணைந்து இயக்கியுள்ளனர். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். மணிசர்மா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சசிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லால் சிங் சத்தா, நாக சைதன்யா, ஆமிர்கான்
லால் சிங் சத்தா, நாக சைதன்யா, ஆமிர்கான்

த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு, ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யான்னிக் பென், சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ திரைப்படத்தில் நாக சைதன்யா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதற்கடுத்த நாள் ’யசோதா’ படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இரண்டு படமும் ஒரே நேரத்தில் மோத வேண்டாம் என்பதால், ’யசோதா’ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். நாக சைதன்யா படத்துக்காகவே, சமந்தாவின் யசோதா ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஆரோக்கியமான முடிவு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in