
சல்மான்கான், கத்ரீனா நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான ’டைகர்3’ படக் கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த இதுகுறித்து நடிகர் சல்மான்கான் காட்டம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறை தினத்தை ஒட்டி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் ‘டைகர் 3’ படம் வெளியானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சல்மான் கானின் படம் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகி இருக்கிறது என்பதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருந்தனர். இந்த ‘டைகர்3’ பட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஒருபடி மேலே போய், திரையரங்கிற்கு உள்ளேயே பட்டாசு வெடித்து அதகளப்படுத்தியுள்ளனர்.
இதனால், படம் பார்க்க வந்த பார்வையாளர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடும்படியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, ‘’டைகர்3’ படம் வெளியான திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டேன். இதைக் கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது. அடுத்தவர்களை சிக்கலுக்குள்ளாக்காமல் படம் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
படத்தில் ஷாருக்கான் கேமியோ செய்துள்ளார். அவரது வருகையின் போதுதான் ரசிகர்கள் பட்டாசு வெடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!