`துக்கப்படுவதை வெறுப்பவர்; சுயமரியாதை மிகுந்தவர்'- வில்லன் நடிகர் சலீம் ஹவுஸ் திடீர் மரணம்

`துக்கப்படுவதை வெறுப்பவர்; சுயமரியாதை மிகுந்தவர்'- வில்லன் நடிகர் சலீம் ஹவுஸ் திடீர் மரணம்

பிரபல வில்லன் நடிகர் சலீம் ஹவுஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ். சென்னையை சேர்ந்த இவர், புணே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். இந்தி தொடர்களிலும் படங்களிலும் வில்லனாக நடித்து வந்த அவர், கமல்ஹாசன் நடித்த ’வெற்றி விழா’ மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னக் கவுண்டர், தர்மசீலன், செந்தமிழ்ப்பாட்டு, திருடா திருடா, ரெட், தாஸ், விஜய்யின் வேட்டைக்காரன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடைசியாக ’கா’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகவில்லை.

வில்லன் வேடங்களில் மிரட்டிய சலீம் கவுஸ், ஷ்யாம் பெனகலின் ’பாரத் ஏக் கோஜ்’ என்ற டிவி தொடரில் ராமர், கிருஷ்ணர், திப்பு சுல்தான் ஆகிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சலீம் கவுஸ், மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி அவர் மனைவி அனிதா சலீம் கூறும்போது, ``கோகிலாபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இன்று காலை உயிரிழந்துவிட்டார். அவர் துக்கப்படுவதை வெறுப்பவர். அவர் கஷ்டப்படவில்லை. யாரையும் சார்ந்திருக்கவும் மாட்டார். சுயமரியாதை மிகுந்தவராக இருந்தார். அவர் பன்முக நடிகர். தற்காப்பு கலை நிபுணர், அழகான சமையல் கலைஞர்’ என்று தெரிவித்துள்ளார்.

சலீம் கவுஸ் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in