மலையாள நடிகர் சஜித் பட்டாளம் காலமானார்

மலையாள நடிகர் சஜித் பட்டாளம் காலமானார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாள நடிகர் சஜித் பட்டாளம் காலமானார். அவருக்கு வயது 54.

கொச்சியைச் சேர்ந்த சஜித் பட்டாளம், வெப்சீரிஸ் மூலம் நடிக்கத் தொடங்கினார். பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவர், டோவினோ தாமஸின் ‘கள’, நிவின் பாலியின் ‘கனகம் காமினி கலகம்’ உட்பட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ‘ஜான்.இ.மன்’ படத்தில் இவர் நடித்த கேரக்டரும் தருண் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ’சவுதி வெள்ளக்கா’ படமும் இவரை கவனிக்க வைத்தன. இவருடைய இயல்பான நடிப்பும் பேச்சும் மலையாள ரசிகர்களை கவர்ந்தன.

கடந்த சில நாட்களாக இவர் உடல் நலமில்லாமல் இருந்தார். இதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த நடிகர் சஜித் பட்டாளத்துக்கு ரம்லா என்ற மனைவியும் அபிதா என்ற மகள், ஷபி என்ற மகன் உள்ளனர்.

மலையாளத் திரையுலகினர் சஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in