குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறினார் நடிகர் சாய் தீனா!

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறினார் நடிகர் சாய் தீனா!

நடிகர் சாய் தீனா தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் அறிமுகமானவர் நடிகர் தீனா. அதன் பின்னர் எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து ஏழை மக்களுக்கு உதவிகளை செய்தார்.

இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார் நடிகர் சாய் தீனா. பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதத்துக்கு மாறியுள்ளார். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in