`சிங்கப்பூர் சலூன்’: தனது அடுத்த படத்தை அறிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி!

`சிங்கப்பூர் சலூன்’: தனது அடுத்த படத்தை அறிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி!

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தன்னுடைய அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார்.

‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய அடுத்தப் படமாக ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க ’இதற்குத் தானே ஆசைப்பட்டாய்’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், ‘’வீட்ல விசேஷங்க’ படம் முடித்ததும் நான் பிற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். நடிகராக மற்ற இயக்குநர்கள் ஒரு நடிகராக என்னை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தேன். அது மட்டுமல்லாமல், என்னை நானே இயக்கும்போது எனக்கான எல்லைகள் தெரியும்.

அதுவும் இல்லாமல் இயக்குநர் கோகுல் எனக்கு நல்ல நண்பர். எந்த ஒரு படத்திற்காகவும் நடிகர்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும் போது, ‘எதுக்கு இதெல்லாம்?’ என்று நினைப்பேன். ஆனால், இப்போது இந்தப் படத்திற்காக நானே முடி வெட்டுவது பற்றிக் கற்றுக் கொண்டேன். இதற்காக, எனக்கு தேவ் மற்றும் ப்ரிதீப் இருவரும் கற்றுக் கொடுத்தார்கள். ஹீரோ ஆகிவிட்டேன் என்பதற்காக மட்டுமே சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ‘இந்த பையனுக்கு என்ன ஆச்சு’ என பார்வையாளர்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. கதைக்கு எது தேவை என்பதை மட்டுமே பார்த்து செய்ய இருக்கிறேன். அந்த வகையில், இந்தப் படத்திற்காகக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தாடி வளர்த்து வருகிறேன்’ என்று பேசியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in