ரியோ ராஜின் அடுத்தப் படம் `ஜோ’!

ரியோ ராஜின் அடுத்தப் படம் `ஜோ’!

நடிகர் ரியோ ராஜுடைய அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலமாக பலருக்கும் பிடித்த நடிகராக மாறிய ரியோ ராஜ் சினிமாவுக்குள்ளும் நடிகராக அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டவர் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

‘ஜோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் டீசரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கி உள்ளார். கதாநாயகியாக பவ்யா டிரிக்கா நடித்துள்ளார். படத்தில் கதாநாயகன் பள்ளிக் காலத்தில் இருந்து கல்லூரி காலம் வரையிலான காதல் காட்சிகள் இடம் பெறும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான தோற்றத்தில் ரியோ ராஜ் தோன்றுகிறார். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in