ஆபாச பட நடிகருடன் அந்த விளம்பரத்தில் இணைந்து நடித்த ரன்வீர் சிங்... வைரலாகும் வீடியோ!

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

ஆபாச பட நடிகருடன் ரன்வீர் சிங் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்புத் திறன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிலும் இவர் சிக்குவதுண்டு.

அப்படித்தான் கடந்த ஆண்டு அரைநிர்வாணமாக இவர் போட்டோ ஷூட் நடத்தித் தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நிலையில் அவர் தற்போது நடித்துள்ள விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ரன்வீர் சிங் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் உடன் சேர்ந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருப்பதுதான் இந்தத் திடீர் பரபரப்புக்குக் காரணம்.

பாலியல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் மருந்துகளை விளம்பரப்படுத்துவதுதான் அந்த காணொலியின் நோக்கம். இந்தி சீரியல் பாணியில் எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தின் கான்செப்ட் ஒருபக்கம் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ’இதுபோன்ற விளம்பரங்களில் ஜானி சின்ஸ் மாதிரியான நடிகருடன் ரன்வீர் சிங் இணைந்து நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன... பணத்திற்காகவா?’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பிரியங்கா சோப்ரா, அர்ஜூன் கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் ‘இந்தத் தைரியம் ரன்வீருக்குத்தான் உண்டு’ என அவரை ஜாலியாக கேலியும் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் ‘இந்த விளம்பரத்தைப் பயன்படுத்தி ஜானி பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறாரா?’ எனவும் உசுப்பேற்றி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in