தீபிகாவின் கணவராக நடிக்க சம்பளம் வாங்காத ரன்வீர்... எந்தப் படத்தில் தெரியுமா?

தீபிகா படுகோன், ரன்பீர்.
தீபிகா படுகோன், ரன்பீர்.

நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவின் கணவராக திரைப்படத்தில் நடிக்க எந்த ஒரு சம்பளமும் வாங்கவில்லை என்றத் தகவலை சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ‘ராம்லீலா’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, ரன்வீரின் ‘சர்கஸ்’, ‘83’ ஆகிய படங்களில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

 ‘ஃபைண்டிங் பேன்னி’
‘ஃபைண்டிங் பேன்னி’

தீபிகா ‘ஃபைண்டிங் பேன்னி’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருப்பார். அதில் அவரின் கணவராக ஐந்து நிமிடங்கள் வரும் காட்சி ஒன்றில் நடித்திருப்பார் ரன்வீர். இதற்காக அவர் சம்பளம் வாங்காமல் நட்பின் அடிப்படையில் நடித்துக் கொடுத்தார் என அந்தப் படத்தின் இயக்குநர் ஹோமி அடாஜானியா தெரிவித்துள்ளார்.

ரன்வீர் - தீபிகா
ரன்வீர் - தீபிகா

இதுகுறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, “ரன்வீர் எனக்கு நல்ல நண்பர். அவர் இந்தப் படத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துவிடும். இந்த ஐந்து நிமிட காட்சிக்காக அரைநாள் எங்களுடன் கோவாவில் இருக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். தனக்கான போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு எங்களுடன் ஒரு வாரம் தங்கி மகிழ்ச்சிப்படுத்தி சென்றார்” எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in