
நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் ராணா இருவரும் இணைந்து படம் தயாரிக்கின்றனர்.
ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘காந்தா’. இதுகுறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தை இணைந்து தயாரிப்பதுடன் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படம் குறித்து நடிகர் ராணா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 'காந்தா' திரைப்படம் நல்ல கதையம்சத்துடன் கூடிய ஒன்று. இதன் கதைதான் எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ’காந்தா’ வின் உலகிற்கு துல்கரை வரவேற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்களை பின்னர் அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.