நடிகர் ராம்சரணுடன் மீண்டும் இணைந்த ‘புஷ்பா’ பட இயக்குநர்!

ராம்சரண் - சுகுமார்
ராம்சரண் - சுகுமார்

’ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் - இயக்குநர் சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் ஹிட்டானது. அதன் பிறகு ராம்சரண் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலமும், சுகுமார் ‘புஷ்பா’ படம் மூலமும் ஹிட் கொடுத்தப் பிறகு இப்போது புதிய படம் ஒன்றிற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் படம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

'ரங்கஸ்தலம்’ படத்தில்
'ரங்கஸ்தலம்’ படத்தில்

ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்ஸ்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அதுபோல இயக்குநர் சுகுமாரும் ‘புஷ்பா2: தி ரைஸ்’ படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கெனவே, ‘புஷ்பா2’ படத்தில் சமந்தாவை கேமியோவில் நடிக்க வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார் சுகுமார்.

அதுபோல, ‘ரங்கஸ்தலம்’ ஹிட் ஜோடிகளான ‘ராம்சரண் - சமந்தா’வை இந்தப் புதிய படத்திலும் எதிர்பார்க்கலாமா என்பதை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in