ஆஸ்கர் விருதுகள் பிரத்யேக குழுவில் இடம்பிடித்த ராம்சரண்... குவியும் பாராட்டுகள்!

ராம்சரண்
ராம்சரண்

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், நடிகர் ராம்சரண் இணைந்திருக்கிறார்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இந்த வருடம் பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. இந்த நிலையில், அண்மையில் நடிகர் ராம்சரண் அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸின் பிரத்யேக நடிகர்களின் பட்டியல் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார்.

இது தொடர்பாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'அவர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும், மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். மேலும் அகாடமியில் நடிகர்கள் பட்டியலுக்கு இந்த திறமையான கலைஞர்களை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' எனக் குறிப்பிட்டிருக்கிறது. அந்த நடிகர்களில் குழுவில் நடிகர்கள் லஷானா லிஞ்ச், விக்கி க்ரிப்ஸ், லூயிஸ் கூ டின்-லோக், கேகே பால்மர், சாங். சென், சகுரா ஆண்டோ, ராபர்ட் டேவி மற்றும் பலர் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in