கங்கனா படப்பிடிப்புத் தளத்திற்கு சென்ற ரஜினிகாந்த்... வைரல் புகைப்படம்!

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

இயக்குநர் விஜயின் படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக வந்து அனைவரையும் வாழ்த்தியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரஜினி
ரஜினி

’மதராசப்பட்டினம்’, ‘தலைவா’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ.எல். விஜய். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கியத் திரைப்படம் ‘தலைவி’. இதில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். இதனை அடுத்து இரண்டாவது முறையாக விஜய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கங்கனா. இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இதன் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.

ரஜினி- கங்கனா
ரஜினி- கங்கனா

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ‘தானு வெட்ஸ் மானு’ படத்திற்குப் பிறகு கங்கனா- மாதவன் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். இன்று படப்பூஜையுடன் கங்கனாவுக்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்டது.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படக் குழுவினரை வாழ்த்தினார். அத்துடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கங்கனா ரஜினியுடன் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ‘சந்திரமுகி2’ படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகி கதாபாத்திரம் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in