நடிகர் ரஜினியின் அடுத்த தேர்வு சிவகார்த்திகேயன் பட இயக்குநரா?

ஜெயிலர்.
ஜெயிலர்.

நடிகர் ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தை 'டான்' பட இளம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அளிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகம், வசந்த் ரவி உள்பட பலர் நடிக்கின்றனர். மேலும் நடிகை தமன்னா, நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிபி சக்கரவர்த்தி
சிபி சக்கரவர்த்தி

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ' டான்' திரைப்படத்தை இயக்கி அறிமுகமான இளம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' என்ற படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் 'தலைவர் 170' படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தியுடன் ரஜினி இணைவதால் இளமை துள்ளும் கதையம்சம் கொண்ட படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in