
ரெட்ரோ லுக்கில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படம் தற்போது படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த்துடன் பஹத் ஃபாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்காக கேரளா சென்றுள்ள ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் அங்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், ரெட்ரோ லுக்கில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய தோற்றம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.