நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' பட ஸ்டில் லீக்: செம அதிர்ச்சியில் படக்குழு

நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' பட ஸ்டில் லீக்: செம அதிர்ச்சியில் படக்குழு
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது படப்பிடிப்பு குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22-ம் தேதி தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் படப்பிடிப்பு தொங்கியது. அங்கு இரண்டு நாட்கள் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையடுத்து எண்ணூர் பகுதிகளில் படப்பிடிப்பை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்படி இந்த புகைப்படம் லீக்கானது என்று விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in