போய் ஆஸ்கரைக் கொண்டு வா... '2018' படக்குழுவை உற்சாகமூட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர் ஜூட் ஆண்டனி
நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர் ஜூட் ஆண்டனி

’2018’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வரும் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ‘2018’ படக்குழு நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.

சமீபத்தில், 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய அரசு சார்பில் '2018' திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை கொண்டு படமாக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை ‘2018’ பட இயக்குநரான ஜூட் ஆண்டனி நேரில் சந்தித்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை என்று சொன்ன ஜூட், நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம், ‘என்ன படம் ஜூட்! எப்படி இதை எடுத்த? போய் ஆஸ்கரைக் கொண்டு வா...என்னுடைய வாழ்த்துகள்’ எனக் கூறினார். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தோழி செளந்தர்யாவுக்கு தனது நன்றியை ஜூட் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in