ரசிகர்களைத் திடீரென சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

ரசிகர்களைத் திடீரென சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

சென்னையில் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்தார்.

சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நாளையொட்டி சென்னையில் போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனையறிந்த ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அவரைப் பார்த்து ரசிகர்கள் "தலைவா" என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அத்துடன் அவருக்குச் சால்வைகளையும் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in