`ராக்கெட்ரி’ படத்தை இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்: ரஜினிகாந்த்

`ராக்கெட்ரி’ படத்தை இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்: ரஜினிகாந்த்

’ராக்கெட்ரி திரைப்படத்தை இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார். சிம்ரன், ரவி ராகவேந்தர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 1-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ’’ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்- குறிப்பாக இளைஞர்கள்.

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் நம்பி நாராயணனின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தன் முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தன்னையும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in