
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்குத் திரும்பியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜெயிலர்’. இதன் படப்பிடிப்பு தற்போது மங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இருந்து பிரேக் எடுத்து மஹா சிவராத்திரி மற்றும் தன் அண்ணன் சத்யநாராயண ராவின் சதாபிஷேக விழா ஆகியவற்றிற்காக நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார்.
இதற்கிடையில் நடிகர் மயில்சாமியின் எதிர்பாராத மரணம் ஏற்பட, அவருக்கு தன்னுடைய இறுதி மரியாதையை செலுத்திய ரஜினிகாந்த் அவரது விருப்பப்படி கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாத சிவ ஆலயத்துக்கு செல்வேன் என்பதையும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது மீண்டும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். மங்களூருவில் நடைபெறும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வார காலத்திற்கு மேல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.