
கேரளாவில் நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தலைவர்170’. இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு பூஜையுடன் கேரளா திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. கேரளாவில் படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்கள் ரஜினிக்கு தினமும் உற்சாக வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.
மேலும், ரெட்ரோ கெட்டப்பில் ரஜினியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிகர் அமிதாப்பச்சன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.