உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்...
நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்...

விரைவில் தொடங்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இன்று வழங்கி கவுரவித்துள்ளார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ‘கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் சமீபத்தில் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ‘கலை, பண்பாடு மூலமாக ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ரஜினிகாந்த் உலகக்கோப்பை போட்டிக்கான விருந்தினராக வரவேற்பதில் மகிழ்ச்சி’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in