`நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்படாதீங்க'- உதவி கேட்ட தயாரிப்பாளரை நெகிழவைத்த ரஜினிகாந்த்!

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்`நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்படாதீங்க'- உதவி கேட்ட தயாரிப்பாளரை நெகிழவைத்த ரஜினிகாந்த்!

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ’’பிதாமகன்’’ படத்தை தயாரித்தவர் எவர் கிரின் மூவிஸ் வி.ஏ.துரை. இவர் சத்யராஜ் நடித்த ’’என்னம்மா கண்ணு’’, விஜயகாந்த் நடிப்பில் ’’கஜேந்திரா’’, ரஜினி தயாரித்த ’’பாபா’’ படத்தின் தயாரிப்பு நிர்வாகி என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத சூழலில் இருக்கும் தனக்கு உதவுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வி.ஏ.துரையை செல்போனில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ‘’நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்படாதீர்கள் . `ஜெயிலர்' படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து பார்க்கிறேன் ‘’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in