பிரபலமான அமீன் மீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை!

பிரபலமான அமீன் மீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை!

ஆந்திராவில் உள்ள பிரபலமான அமீன் மீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்தார். அவருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்த ரஜினிகாந்த், பின்னர் கடப்பாவுக்கு சென்றார். அங்கு, இசையமைப்பாளர் ஏ.ஆ.ர் ரஹ்மானுடன் அமீன் பீர் தர்காவுக்கு சென்று ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்தார். அங்கு இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த்துடன் அங்கிருந்த தர்கா நிர்வாகிகள் தர்கா குறித்து விரிவாக கூறினர்.

இந்த பிரார்த்தனைக்கு பிறகு ரஜினிகாந்த் அங்கிருந்து கர்நாடகா செல்கிறார். அங்கு நடைபெற உள்ள ஜெயிலர் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in