ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. இந்தியாவில் கரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கரோனா பீதியின்றி பொதுமக்கள் கேக் வெட்டி இந்த புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், "உன் வாழ்க்கை உன் கையில் "என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி ரஜினிகாந்தை பார்ப்பதற்காக சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு இன்று ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் கையை அசைத்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in