
’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்துள்ள சர்ப்ரைஸ் பரிசு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
’பாவக்கதைகள்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகர் ஜாஃபர் சாதிக் தற்போது வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு பரிசளித்துள்ள சன்கிளாஸ் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
’நான் கேட்டேன், அவர் கொடுத்தாரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி’ என அவர் ‘ஜெயிலர்’ படத்தில் அணிந்திருந்த சன் கிளாஸை தனக்கு பரிசளித்தது குறித்து மகிழ்ச்சியுடன் இதைப் பகிர்ந்துள்ளார் ஜாஃபர்.