தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தேசிய விருது பெற்றுள்ள நடிகர் சூர்யா உள்ளிட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சூர்யா நடித்த `சூரரைப் போற்று’ சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், `தன்ஹாஜி: அன்சங் வாரியர்’ என்ற இந்திப் படத்தில் நடித்த அஜய்தேவ்கனுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

வசந்த் சாய் இயக்கிய `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த எடிட்டர் விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், துணை நடிகை விருது லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கும் கிடைத்துள்ளது. யோகிபாபு நடித்த மண்டேலா படத்துக்கு சிறந்த வசனத்துக்கான விருதும் சிறந்த அறிமுக இயக்குநருக்குமான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து விருதுபெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் ’சூரரைப் போற்று’ பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in