மதுரையில் பிறந்த மதுரைவீரன்... விஜயகாந்த் பற்றி ரஜினிகாந்த் உருக்கம்!

விஜயகாந்த்- ரஜினிகாந்த்
விஜயகாந்த்- ரஜினிகாந்த்

நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பத்ம ப் பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது பற்றி ரசிகர்களும் திரையுலகினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கெளரவித்துள்ளார்கள்.

நம்ம எல்லோருக்குமே மகிழ்ச்சியான விஷயம். இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டக்குனு தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்து விட்டார். இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். அவர் நாமம் வாழ்க, நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் ரஜினி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in