ரஜினிகாந்த், வீரப்பன்
ரஜினிகாந்த், வீரப்பன்

எங்கள் நட்பு ஆழமானது... ஆர்.எம். வீரப்பன் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

"பணத்திற்குப் பின்னால் ஓடாதவர் வீரப்பன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் தன் வாழ்வில் கடைபிடித்தவர் அவர்” என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது மறைவுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மூத்த அரசியவாதி ஆர்.எம்.வீரப்பன்
மூத்த அரசியவாதி ஆர்.எம்.வீரப்பன்

வயது மூப்பு காரணமாக மூத்த அரசியல்வாதி, தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி மரியாதை செலுத்த நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் வீரப்பன் குறித்தான நினைவுகளை பத்திரிகையாளர்களிடம் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ”புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை, என அனைத்திலும் அவரது வலது கரமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் சார். அவரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று மத்திய, மாநில அமைச்சர்களாகவும், கல்வி நிறுவனங்களின் அதிபர்களாகவும் பேருடனும் புகழுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்”

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

”ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்தின் பின்னால் சென்றவர் கிடையாது. கடமை, கட்டுப்பாடு, கண்ணியம் என இது மூன்றையும் தனது கொள்கையாகக் கொண்டு பின்பற்றியவர். அண்ணா சொன்ன அனைத்து கோட்பாடுகளையும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வந்தார். எனக்கும் அவருக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது. உணர்ச்சிகரமானது. புனிதமானது! அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்” எனப் பேசியுள்ளார்.

ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்தவர் வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in