
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநில நிர்வாகியான சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர் சுதாகர். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
ஆனால், அதை சுதாகர் மறுத்தார். " எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சுதாகர் இன்று காலை காலமானார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் ட்விட்டில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.