`எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் உருக்கம்

 ரஜத் ரவைல்
ரஜத் ரவைல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், ``தனக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ரஜத் ரவைல். சில படங்களைத் தயாரித்தும் ஜமீர், டில் நே பிர் யாத் கியா ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். சல்மான் கானின் ’பாடிகார்ட்’ படத்தில், இவருடைய சுனாமி சிங் என்ற கேரக்டர் வரவேற்பை பெற்றது. போலீஸ்கிரி, ஜுத்வா 2, கூலி நம்பர் 1 உட்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், வெரி கோஸ் வெயின் (varicose vein) பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தார்.

 ரஜத் ரவைல்
ரஜத் ரவைல்

இந்நிலையில், சமீபத்தில் அவருடைய வலது காலில் ரத்தக்குழாய் உடைந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி ரஜத் ரவைல் கூறும்போது, ``இப்போது கால் நரம்பிலிருந்து ரத்தக் கசிவு நின்றுவிட்டது. காயம் ஆறிவருகிறது. ஓய்வெடுக்க வேண்டும் என்றும் யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்னைப் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எனக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in