கணவரை இழந்து 3 குழந்தைகளோடு போராடிய பெண்... நடிகர் பாலா, ராகவா லாரன்ஸ் செய்த பேருதவி!

பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து பாலா, ராகவா லாரன்ஸ் உதவி
பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்து பாலா, ராகவா லாரன்ஸ் உதவி

கணவரை இழந்த நிலையில் ரயிலில் சமோசா விற்று 3 பெண் குழந்தைகளை வளர்த்து வரும் முருகம்மாள் என்பவருக்கு, புதிய ஆட்டோ வாங்கி கொடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் பாலா உதவினர்.

பைக் பரிசளித்த பாலா
பைக் பரிசளித்த பாலா

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். மேலும், தாம்பரம் அருகே அனகாபுத்தூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம், பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞருக்கு இருசக்கர வாகனம் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இந்த சேவையை பாராட்டி நடிகரும், சமூக சேவருமான ராகவா லாரன்ஸ், இனி பாலா செய்யும் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் என்னுடைய பங்கும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இருவரின் நிதி உதவியால், திருவண்ணாமலை மாவட்டம், இரும்பேடு அரசுப் பள்ளியில் 15 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டிக் கொடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக கணவரை இழந்த நிலையில் ரயிலில் சமோசா விற்று 3 பெண் குழந்தைகளை வளர்த்து வரும் முருகம்மாள் என்பவருக்கு, புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முருகம்மாள், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலாவை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். மேலும், அந்த பெண்ணை ஆட்டோ ஓட்ட வைத்து, அதில் பாலாவும் ராகவா லாரன்ஸூம் பயணம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in