சினிமா டப்பிங் யூனியன் தேர்தல்... சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் ராதாரவி மீண்டும் தலைவரானார்!

ராதாரவி
ராதாரவி

தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தலில் நடிகர் ராதாரவி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வாக்களிக்க வந்த ராதா ரவி
வாக்களிக்க வந்த ராதா ரவி

டப்பிங் யூனியனுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் பதிவான வாக்குகள் 1017. இதில் நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ராதாரவி மிகவும் உடல் நலன் குன்றி நடப்பதற்கு சிரமப்பட்டு கைத்தடியுடன் வந்திருந்தார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் மீண்டும் டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி இருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவி

இந்த பிரச்சினைகள் மற்றும் உடல்சோர்வு காரணமாக ராதாரவி முதலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என அவர் சொன்னதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால், ஆதரவாளர்களின் வற்புறுத்தலால் நடிகர் ராதாரவி மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அவரது ஆதரவாளர்கள் மறுத்தனர்.

அதாவது, டப்பிங் யூனியலில் சில பெண்களைத் தரக்குறைவாக நடத்துவது, தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. அதேபோல பாடகி சின்மயி விவகாரமும் இந்த சமயத்தில் பூதாகரமானது. ராதாரவி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே செய்திகள் வெளியானது. ஆனால் அதையெல்லாம் மீறி நடிகர் ராதாரவி பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராகி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in