`நீங்க தான் எனக்கு மகனாக வந்து பிறக்கணும்'- புகைப்படம் வெளியிட்டு `புகழ்' நெகிழ்ச்சி

`நீங்க தான் எனக்கு மகனாக வந்து பிறக்கணும்'- புகைப்படம் வெளியிட்டு `புகழ்' நெகிழ்ச்சி

பென்ஸியுடனான திருமணத்திற்கு பிறகு நடிகர் புகழ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

’குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்த புகழுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலியான பென்ஸியுடன் திருமணம் நடந்தது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகழ், பென்ஸி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இஸ்லாம் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பே அதாவது ஒரு வருடத்திற்கு முன்பே கோவையில் பென்ஸியுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் புகழ். இந்த புகைப்படங்களும் இந்த சமயத்தில் வெளியாகி வைரலானது.

இதனை விளக்கும் வகையில், ‘என் தந்தை அன்பிற்கு ஒரு முறை, என் தாய் அன்பிற்கு ஒரு முறை, என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை, வேறு அன்பு உள்ளங்கள் ஆசைப்பட்டால் மேலும் ஒரு முறை தயார். இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே’ என கூறியுள்ளார்.

மேலும், மறைந்த நகைச்சுவை கலைஞரான வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தை பென்ஸியுடன் தொட்டு வணங்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்து, ‘இனிய திருமண வாழ்த்துகள் மாமா.

உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்தில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் எப்பவும் எங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க. கண்டிப்பாக நீங்க தான் எனக்கு மகனாக வந்து பிறக்க அந்த கடவுளை வேண்டிக்கிறேன்’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் புகழ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in