குடும்பத்துடன் கோயிலில் புகழ்
குடும்பத்துடன் கோயிலில் புகழ்

நெகிழ்ச்சி... குலதெய்வ கோயிலில் மகளுக்கு பூ முடி எடுத்த புகழ்!

நடிகர் புகழ் தனது மகளுடன் முதல் தீபாவளியைக் கொண்டாடிய நிலையில் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த நிலையில், இன்று புகழ் தனது மகளுக்கு முதல் பூ முடி எடுத்துள்ளார்.

மனைவி பென்ஸியுடன் கோயிலில் புகழ்
மனைவி பென்ஸியுடன் கோயிலில் புகழ்

’கலக்கப் போவது யாரு?’, ‘அது இது எது’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மூலம் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் புகழ் தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த பென்ஸி என்பவருக்கும் கடந்த வருடம் காதல் திருமணம் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த காதல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரிதன்யா என பெயர் வைத்துள்ள புகழ், ‘தாரத்தின் மூலம் எனக்கு கிடைத்த இன்னொரு தாய். மகள் அல்ல, மகாராணி’ என மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு இருந்தார்.

மகள், மனைவியுடன் புகழ்
மகள், மனைவியுடன் புகழ்

இந்த நிலையில், இன்று காலை விழுப்புரத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலான தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலில் தனது குடும்பத்தாருடன் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து குழந்தைக்கு பூ முடி எடுத்து வழிபட்டுள்ளார். இந்தக் கோயிலில்தான் பென்ஸி- புகழ் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இடத்திலேயே தனது பிறந்தநாளில் மகளுக்கு பூ முடி எடுத்துள்ளார் புகழ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in