ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்த புகழ்: வைரலாகும் புகைப்படங்கள்!

ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்த புகழ்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘குக் வித் கோமாளி’ புகழ் ஒரு வருடத்திற்கு முன்பே பென்ஸியுடன் திருமணம் செய்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். பிறகு ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வலிமை’ உள்ளிட்ட பல படங்களில் நடிகர் சூர்யா, அஜித், விஜய் சேதுபதி, சந்தானம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்ஸி என்பவரை காதலிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் புகழ். இதனையடுத்து நேற்று முன்தினம் புகழ்-பென்ஸி இருவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. கோவையை சேர்ந்த பென்ஸி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.

இவர்கள் திருமணத்திற்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். புகழும் திருமண கோலத்தில் பென்ஸியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த வருடத்தில் புகழ்- பென்ஸி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது.

பென்ஸி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு குடும்பத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்திருக்கிறது. இதனாலே, இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in