கணவருடன் வந்த நடிகையை தாக்கியது ஏன்?- நடிகரின் மனைவி விளக்கம்

கணவருடன் வந்த நடிகையை தாக்கியது ஏன்?- நடிகரின் மனைவி விளக்கம்

நடிகர் ஒருவர், நடிகையுடன் காரில் சென்றதை கண்ட அவர் மனைவி, இருவரையும் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏன் இப்படி நடந்துகொண்டேன் என்று நடிகரின் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

ஒடியா திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் பாபுஷான் மொகந்தி. இவர் சக நடிகையான பிரக்ருதி மிஸ்ராவுடன் சென்னை செல்வதற்காக புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த திருப்தி சத்பதி, காருக்குள் இருந்த பாபுஷானையும் பிரக்ருதி மிஸ்ராவையும் தாக்கினார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை இழுத்தார்.

பின்னர் அங்கிருந்து ஓடிய அவர், அருகில் நின்றிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற முயன்றார். துரத்திய திருப்தி, அவரை அங்கிருந்து விரட்டினார். அப்போது திருப்தி, ‘என் குடும்பத்தை பிரக்ருதி மிஸ்ரா அழித்துவிட்டார்’ என்று கத்தினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

திருப்தி சத்பதி
திருப்தி சத்பதி

இதையடுத்து பிரக்ருதியின் தாய் கிருஷ்ணப்பிரியா இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பாபுஷான் மொகந்தியின் மனைவி, திருப்தி சத்பதியும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், `என் கணவரை பிளாக்மெயில் செய்து அவருடன் வாழ நடிகை பிரக்ருதி நிர்பந்தித்து வருகிறார். அவர் வரும் வரை எங்கள் வாழ்க்கை இனிமையாகவே இருந்தது. அவர் வந்தபின் நிம்மதி போய்விட்டது. பிரக்ருதியுடன் அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். எங்கள் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க பலமுறை முயன்றேன். நேற்று கணவர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காகச் சென்றேன். அவர்கள் சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். கோபத்தில் அப்படி நடந்துகொண்டேன். எனக்கும் என் மகனின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in