'கில்லி’ படத்தில்...
'கில்லி’ படத்தில்...

முத்துப்பாண்டிக்கு லவ் யூ சொல்றாங்க... நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!

ரீ-ரிலீஸிலும் சாதனைப் படைத்து வருகிறது ‘கில்லி’ திரைப்படம். திரையரங்குகள் இந்த கோடை வெயிலிலும் நிரம்பி வழிகிறது. விறுவிறு திரைக்கதை, மாஸ் ஹீரோ, ஹிட் பாட்டு என்று ரசிகர்களின் எவர் க்ரீன் படங்களில் லிஸ்ட்டில் ‘கில்லி’ படம் இடம் பிடித்த நிலையில், இந்த ரீ-ரிலீஸையும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், ’கில்லி’ படத்தின் முத்துப்பாண்டி கதாபாத்திரத்திற்கு மக்கள் சொல்லும், ‘ஐ லவ் யூ’ கேட்கும் போதே சந்தோஷமாக இருப்பதாக பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

தரணி இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘கில்லி’. இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை ஒட்டி இந்தப் படம் கடந்த 20ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான ரீ-ரிலீஸ் படங்களில் இந்தப் படம்தான் அதிக மக்கள் கூட்டம் வந்ததாகவும், ரூ.12 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

'கில்லி’ படத்தில்...
'கில்லி’ படத்தில்...

இந்தப் படத்தில், த்ரிஷா கதாபாத்திரத்தை விரட்டி விரட்டி காதலிக்கும் வில்லன் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மிரட்டியிருப்பார். வில்லன்னத்தனம், கலாட்டா என இவரது கதாபாத்திரம் படத்தில் சுவாரஸ்யமான ஒன்று. குறிப்பாக, த்ரிஷாவை படத்தில் ‘செல்லம்...செல்லம்...ஐ லவ் யூ’ என்று இவர் சொல்லும் மாடுலேஷன் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது.

படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவது குறித்து பிரகாஷ்ராஜ், “தியேட்டரில் என் கதாபாத்திரம் வரும்போது, ‘முத்துப்பாண்டி ஐ லவ் யூ’ என்று மக்கள் கத்தி சந்தோஷப்படுவதைப் பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சிருக்கு. படம் வெளியாகி இத்தனை வருஷம் ஆகுது. தொலைக்காட்சியில் அத்தனை முறை படத்தைப் பார்த்து இருக்காங்க.

இருந்தாலும் மக்கள் தியேட்டரில் இப்போது வெளியான படம் போல, கொண்டாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. லவ் யூ ஆல் செல்லம்ஸ்” என்று நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். மேலும், விஜய்- த்ரிஷா- பிரகாஷ்ராஜ் காம்பினேஷனும் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. சீக்கிரம் மூன்று பேரும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி எனவும் பேசி இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in