
நாலு ஃபாரின் படம் பார்த்து கதை திருடி படம் எடுக்கப் போகிறேன் என பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய கும்பிடு போட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களை அனுப்ப இருப்பதாகவும் அவர்களுடன் போட்டி போட்டு வெற்றிப் பெற்றால் மட்டுமே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியும் எனவும் பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பவர்கள் எக்ஸ் போட்டியாளர்கள் என்ற விஷயத்தையும் பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். இதனால், யார் அந்த மூன்று பேர் எனவும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் மீண்டும் உள்ளே வருவாரா எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்க அதை மறுக்கும் விதமாக பிரதீப் ட்வீட் செய்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, “இப்போ என்னை நம்பி 4-5 தயாரிப்பாளர்கள் கதை கேட்க தயாரா இருக்காங்க. நான் கோவாவில் நடக்க இருக்கிற சர்வதேச திரைப்பட விழாவுக்கு கிளம்புகிறேன். நாலு ஃபாரின் படம் பார்த்து திருடி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, படத்தோட வரேன். ஆள விடுங்க! நீங்களாச்சு, பிக் பாஸ் ஆச்சு!’ எனக் கூறியுள்ளார். மேலும், கோவாவில் இருந்து தற்போது புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருவதால் அவர் மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்குள் போகப் போவது இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி