
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் கமலை கடுப்பேற்றும் விதமாக பிரதீப் போட்டுள்ள ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருப்பது பலதரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதவை திறந்து கொண்டே கழிவறையை பயன்படுத்துகிறார், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சொல்லி பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த ரெட் கார்டை குடும்பத்துடன் பிரதீப் ஆண்டனி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
மேலும், பலரும் பிரதீப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஆண்டனி கமலையும் பிக் பாஸ் போட்டியாளர்களையும் கடுப்பேற்றும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப், ‘நான் வெளியே வந்ததும் சோஷியல் மீடியா ரெஸ்பான்ஸ் பார்த்ததும் இதுதான் நான் நினைக்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்து உடன் நின்றதற்கு நன்றி. என்னால் முடிந்த அளவுக்கு நல்ல ஆர்டிஸ்ட் ஆக முயற்சி செய்கிறேன். நல்லா இருங்க. அடுத்த வேலையைப் பார்ப்போம்’ என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்