`நானே நம்பாத போது கூட நீ என்னை நம்பினாய்’- பாராட்டிய பிரபாஸை நெகிழ வைத்த ராஜமெளலி!

`நானே நம்பாத போது கூட நீ என்னை நம்பினாய்’- பாராட்டிய பிரபாஸை நெகிழ வைத்த ராஜமெளலி!

நடிகர் பிரபாஸின் பாராட்டுதலுக்கு இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியான பதில் கொடுத்துள்ளார்.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் வெளியானத் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. இப்போது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கும் கோல்டன் க்ளோப் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிப்படங்கள் பிரிவிலும், சிறந்த பாடலுக்கான பிரிவிலும் விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளது.

இதுமட்டுமல்லாது, படத்தின் இயக்குநரான ராஜமெளலி நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் வட்டத்தில் சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளில் ரன்னர் அப்பாக சிறந்த இயக்குநராக தேர்வாகியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு நடிகர் பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த இயக்குநரான ராஜமெளலி இந்த உலகையே வெல்லப் போகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அதேபோல, படத்தின் இசையமைப்பாளரான கீரவாணி லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸின் விருதுகளில் மிகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்’ என தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் ராஜமெளலி, ‘மிக்க நன்றி அன்பே! தேசிய அளவில் என்னுடைய திறமை மதிக்கப்படும் என `நானே நம்பாத போது கூட நீ என்னை நம்பினாய்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in