நடிகர் 'பூ' ராமு திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் 'பூ' ராமு திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் 'பூ' ராமு மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

சசி இயக்கிய ‘பூ’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமு. இதையடுத்து 'பூ' ராமு என்று அழைக்கப்பட்டார். 'நீர்ப்பறவை', 'தங்கமீன்கள்', 'நெடுநல்வாடை', 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் நலம்பெற வேண்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் உடல்நிலை இன்று மோசமானது. மாலையில் அவர் உயிரிழந்தார். இதனால் அவரது ரசிகர்கள், நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவருடைய இறுதிச் சடங்கு ஊரப்பாக்கத்தில் நாளை நடக்கிறது. அவர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in