பிரபல நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Updated on
1 min read

பிரபல நடிகர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசி இயக்கிய ‘பூ’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமு. இதையடுத்து பூ ராமு என்று அழைக்கப்பட்டார். நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன் உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு என்று கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை நடிகர் காளிவெங்கட் உட்பட சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

காளிவெங்கட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார். அவர் நலம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in