இந்து மதம் குறித்த சர்ச்சை: நடிகர் பார்த்திபன் பரபரப்பு கருத்து!

இந்து மதம் குறித்த சர்ச்சை: நடிகர் பார்த்திபன் பரபரப்பு கருத்து!

ராஜராஜ சோழன் இந்து மதம் குறித்த சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் தனது பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சி நடப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல குரல்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலையும் குவித்துள்ளது.

இது தொடர்பாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "400 கோடியைக் கடந்தது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது!

இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு(இ)ப்பலாம்! எழுப்பினால் … இன்னும் ஒரு 100!" என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in