நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்நடிகர் பார்த்திபன் பதிலடி ட்வீட்

இறந்துவிட்டதாக வதந்தி: நடிகர் பார்த்திபனின் நெத்தியடி பதில்!

இறந்துவிட்டதாக ஒரு யூடியூப் சேனல் பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததற்கு நடிகர் பார்த்திபன் பதிலடி ட்வீட் செய்துள்ளார்.

தன்னுடைய காதல் பற்றி நடிகர் பார்த்திபன் பேசி வருவது பொய் என்று நடிகை சீதா விவரித்து அவர் தனக்கு மட்டும் புருஷனாக இல்லாததால் பிரிந்துவிட்டேன் சொன்ன சூடு இன்னும் மறையவில்லை.

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் இறந்துவிட்டதாக ஒரு யூடியூப் சேனல் பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தனது ஸ்டைலில் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! நெகட்டிவிட்டியை பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்" என்று நெத்தியடியான பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in