`இப்படியெல்லாம் செய்ய முடியுமா'... விஜய் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நடிகர் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் - விஜய்
நடிகர் பார்த்திபன் - விஜய்

நடிகர் விஜய் ரசிகர்களிடம் நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகி உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரப் பெயர் ‘பார்த்திபன்’. இதைக் குறிப்பிட்டு முன்பு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தில் பெயரளவிலாவது இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட் வைரலானது.

இதனை அடுத்து, தற்போது ரசிகர்கள் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தில் பார்த்திபன் முகத்தை எடிட் செய்து நடிகர் பார்த்திபனை டேக் செய்து, ‘பார்த்திபன் பார்த்திபனாக’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளனர். இந்த ட்வீடைத் தன்னுடைய டைம்லைனில் பகிர்ந்துள்ள பார்த்திபன், ‘நடிகர் விஜய் ரசிகர்கள் மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!’ என ட்விட் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in