`அவரைப் பார்த்தாலே உற்சாகம் வரும்'- அனைவரின் நினைவில் நெல்லை சிவா

`அவரைப் பார்த்தாலே உற்சாகம் வரும்'- அனைவரின் நினைவில் நெல்லை சிவா

1985-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.பாண்டியராஜனால் 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்லை சிவா. சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி என்பதுதான் அவரது சொந்த பெயர். 1952-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிறந்தவர் நெல்லை சிவா. திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர்.

மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாக விளங்கிய நெல்லை சிவா, 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் வடிவேலுவின் 'கிணற்றை காணும்' என்ற நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர். அவர் பேசும் திருநெல்வேலி வட்டாரத் தமிழுக்காகவே அவருக்கு ரசிகரான பலர் திரையில் அவரைப் பார்த்தாலே ஒரு உற்சாகம் வரும். அது இயல்பான அவரது நடிப்பு காரணம். அவர் பேசும் தமிழ் திருநெல்வேலித் தமிழ் என்றாலும் அது அச்சு அசலாக பேசிய சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்தவகையில், அவரது 'கெணத்தை காணோம்' காமெடி மிகவும் பிரபலமானது. கடைசிக் காலக் கடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சின்னத்திரை தொடரிலும் அவர் நடித்து வந்தார். ஊரடங்கு காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் காலமானார்.

Related Stories

No stories found.